முன்னாள் அமைச்சரின் கார் மீது மோதி சோகம்; இருசக்கர வாகன ஓட்டி பலி.!
முன்னாள் அமைச்சரின் கார் மீது மோதி சோகம்; இருசக்கர வாகன ஓட்டி பலி.!

முன்னாள் மத்திய அமைச்சரான பொன். இராதாகிருஷ்ணனின் காரில், பின்புறம் மோதிய இருசக்கர வாகன ஓட்டி விபத்தில் சிக்கி உயிரிழந்த சோகம் நடந்தது. மேலும், அவருடன் பயணம் செய்த நபர் படுகாயம் அடைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில், பால்பண்ணை சாலையில், நேற்று முன்தினம் இரவில் பொன். ராதாகிருஷ்ணன் தனது காரில் பயணம் செய்தார்.
இதையும் படிங்க: திடீரென திரும்பிய கார்.. பயணிகளின் உயிரை காப்பாற்றிய டெம்போ ஓட்டுநர்.. திக்., திக் நிமிடத்திலும், ஓட்டுனருக்கு குவியும் பாராட்டு.!
அப்போது, விபத்துகளை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்திருக்க, பொன். ராதாகிருஷ்ணன் கார் வேகத்தை குறைத்துள்ளார். அப்போது, இவர்களின் காருக்கு பின்னால், 38 வயதுடைய கணேசன் என்பவர் இருசக்கர வாகனம் ஓட்டி வந்தார்.
விபத்தில் சிக்கி சோகம்
தென்காசியை சேர்ந்தவர் ஓட்டி வந்த வாகனத்தில், நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் வைசத்து வரும் ராஜ்குமார் (வயது 38) என்பவரும் இருந்தார்.
இவர்களின் வாகனம் பொன். ராதாகிருஷ்ணனின் வாகனத்தில் சாலை தடுப்பு இருந்த பகுதியில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சாலையின் வலப்பக்கம் விழுதை கணேசன், எதிர்திசையில் வந்த சுற்றுலா பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார்.
இந்த சோக சம்பவத்தில் கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ராஜ்குமார் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் பார்வதிபுரம் பகுதியில் செயல்படும் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த நிலையில், இருளப்பபுரம் பகுதிக்கு சென்றபோது விபத்து நடந்துள்ளது.
இதையும் படிங்க: செயின் பறித்தவர், ஜாதி வெறியருக்கு தவெக மாவட்ட செயலாளர் பொறுப்பு? - நிர்வாகிகள் குமுறல்.!