பள்ளி மாணவி தற்கொலை.. பலாத்கார வழக்கில் கரத்தே மாஸ்டர் கைது!
பள்ளி மாணவி தற்கொலை.. பலாத்கார வழக்கில் கரத்தே மாஸ்டர் கைது!
கேரளா மாநிலத்தில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் அருகே உள்ள ஊர்க்கடவு பகுதியை சேர்ந்த சித்திக் அலி என்ற நபர் கராத்தே மாஸ்டராக உள்ளார். இவர் தனது வீட்டில் வைத்து பலருக்கும் கராத்தே பயிற்சி அளித்து வருகிறார்.
அந்த வகையில் இவரிடம் அங்குள்ள சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நிறைய மாணவ, மாணவிகள் கராத்தே பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இவரிடம் கராத்தே பயிற்சி பெற்று வந்த அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் நேற்று முன்தினம் திடீரென காணாமல் போனார்.
இதனையடுத்து மனைவியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே மாணவியின் உடல் அருகில் உள்ள ஆற்றில் மிதந்து கிடந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்.
அந்த விசாரணையில் கராத்தே பயிற்சியாளர் சித்திக் அலி மனைவியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மணமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சித்திக் அலியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.