காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு.. ஓடும் இரயில் முன்பாய்ந்து உயிரை மாய்த்த இளம் காதல் ஜோடி.!
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு.. ஓடும் இரயில் முன்பாய்ந்து உயிரை மாய்த்த இளம் காதல் ஜோடி.!
அனேகல்லை சேர்ந்த காதல் ஜோடியின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் இரயில் முன் பாய்ந்து தங்களின் உயிரை இழந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், அனேகல் சம்மந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணி (வயது 27). இதே பகுதியை சேர்ந்தவர் அனுஷா (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த சில வருடமாக காதலித்து வந்த நிலையில், ஜோடியின் காதல் விவகாரம் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது.
இதனால் பெற்றோர்கள் கடுமையான எதிரு தெரிவிக்கவே, மனமுடைந்துபோன காதல் ஜோடி மணி - அனுஷா தற்கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து, நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும், சம்மத்தூர் இரயில்வே தண்டவாளத்திற்கு சென்று, அவ்வழியே வந்த இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
இரயில் மோதியதில் இருவரின் உடலும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மறுநாள் காலையில் தான் அப்பகுதி மக்கள் இருவரின் உடலையும் கண்டுள்ளனர். பின்னர், இந்த விஷயம் தொடர்பாக பையப்பனஹள்ளி இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, காதல் ஜோடியின் பெற்றோர்கள் எதிர்பால் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. இந்த சம்பவம் அனேகல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.