#Breaking: கர்நாடக சட்டப்பேரவையில் அமளி; சபாநாயகர் மீது பேப்பர் வீச்சு..!
#Breaking: கர்நாடக சட்டப்பேரவையில் அமளி; சபாநாயகர் மீது பேப்பர் வீச்சு..!

கர்நாடக மாநில சட்டப்பேரவையில், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பட்ஜெட் தாக்கல் செய்தது. அதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, ஹனி ட்ராப் முறை குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஹனி டிராப் முறையில் ஈடுபடும் நபர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பின்புலத்தில் செயல்படும் நபர்கள் குறித்தும் விசாரிக்கப்படும். இதுதொடர்பான உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: துணிதுவைக்கச் சென்ற பெண்களுக்கு ஏரியில் காத்திருந்த எமன்; இளம்பெண்கள் மூவர் நீரில் மூழ்கி பலி.!
மேலும், கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரை குறிவைத்து ஹனி டிராப் முறையில் பணம் பறிக்க முயற்சிகள் நடக்கிறது. ஹனி ட்ராப் முறையில் சிக்க வைக்க நடக்கும் முயற்சிகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
அதேபோல, கர்நாடக அரசின் ஒப்பந்த பணிகளில், 4% சிறுபான்மையினருக்கு ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அந்த விஷயத்துக்கும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரவாயல்: இ-பைக் தீப்பிடித்த விவகாரம்; தந்தை, கைக்குழந்தை அடுத்தடுத்து பலி.. தாய் உயிர் ஊசல்.!