திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு பிடிவாரண்ட்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!
திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வுக்கு பிடிவாரண்ட்.. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்.!
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏவுக்கு செக் மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜ். இவர் தற்போது திமுகவில் இணைந்துவிட்டார். இவரின் மீது ரூ.10 இலட்சம் செக் மோசடி வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் கீழ் எஸ். காமராஜை கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அதிமுக சார்பில் எஸ். காமராஜ் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், அவர் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் கரூர் அம்பாள் நகரை சேர்ந்த இராமச்சந்திரன் என்பவரிடம் ரூ.10 இலட்சம் கடன் வாங்கியுள்ளார்.
ஆனால், கடனை தற்போது வரை திரும்ப கொடுக்காத நிலையில், கடனை கேட்டு விரக்தியடைந்த இராமச்சந்திரன் செக் மோசடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரணை செய்த கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி சரவணபாபு, முன்னாள் எம்.எல்.ஏ காமராஜுக்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளார்.