தனது தொண்டர்கள், நண்பர்களுக்கு திடீர் அன்புக்கட்டளை; கே.என் நேருவின் உத்தரவு.. காரணம் என்ன?.. விபரம் இதோ.!
தனது தொண்டர்கள், நண்பர்களுக்கு திடீர் அன்புக்கட்டளை; கே.என் நேருவின் உத்தரவு.. காரணம் என்ன?.. விபரம் இதோ.!
நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கனகில்லியநல்லூர் நாராயணசாமி ரெட்டியார் நேரு என்ற கே.என் நேரு. வரும் நவம்பர் 09ம் தேதி அவரின் பிறந்தநாள் சிறப்பிக்கப்படவுள்ளது. இதற்காக அவரின் தொண்டர்கள் மற்றும் பின்தொடர்பாளர்கள் தயாராகி வந்தனர்.
இந்நிலையில், "நவம்பர் மாதம் 09ம் தேதி வியாழக்கிழமை அன்று, தான் ஊரில் இருக்கமாட்டேன் என்பதால், எனது பிறந்தநாளையொட்டி என் மீது அன்பு கொண்டுள்ள நண்பர்கள், கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் திருச்சி மற்றும் சென்னைக்கு நேரில் வாழ்ந்து தெறிக்க வரவேண்டாம், அதற்கான முயற்சியும் எடுக்க வேண்டாம்.
அந்நாளில் எனது பிறந்தநாள் விழா என்ற பெயரில், எவ்வித நிகழ்ச்சியையும் நடத்த வேண்டாம் என கழக நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.