தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவி ஒருபக்கம், மகள் மறுபக்கம்.. தொழிலதிபருக்கு 100 கோடியை நாமம்போட்ட தில்லாலங்கடி குடும்பம்.!

மனைவி ஒருபக்கம், மகள் மறுபக்கம்.. தொழிலதிபருக்கு 100 கோடியை நாமம்போட்ட தில்லாலங்கடி குடும்பம்.!

Kovai businessman cheated By an family Advertisement

ஒரு குடும்பமே சேர்ந்து கோவை தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலியான ஆவணங்களை தயாரித்தும், அவரது 100 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி திருடியும் இருக்கின்றனர். 

கோவை பீளமேடு பகுதியில் சிவராஜ் என்ற நபர் மின் காற்றாலை அலுவலகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். தொழிலதிபரான சிவராஜின் அலுவலகத்தில் பணிபுரிந்த நபர்களில் 8 பேர் அவரது அலுவலகத்தில் முறைகேடாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Covai

100 கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றியது மட்டுமல்லாமல் சுமார் 200 கோடிக்கும் மேல் மதிப்பிலான சொத்துக்களுக்கு போலி ஆவணங்களை தயாரித்து தங்கள் வசப்படுத்தியுள்ளனர். இந்த மோசடி சிவராஜ்க்கு தெரிய வரவே அவர் உடனடியாக கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்த சிவகுமார் மற்றும் வசந்த் இருவரை உடனடியாக கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அஸ்வின் குமார் உள்ளிட்ட இரண்டு பேர் தலைமறைவாகி இருக்கின்ற நிலையில் அவருடைய மகள் தீக்ஷா, மனைவி ஷீலா மற்றும் மருமகன் சக்தி சுந்தர் உள்ளிட்ட 3 பேர் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். ஒரு தொழிலதிபருக்கு சொந்தமான அலுவலகத்தில் சொத்துக்களை அபகரித்து, கோடிக்கணக்கான பணத்தையும் திருடி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் செய்த மோசடி அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Covai #cheat #Business man #Peelamedu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story