பெயிண்ட் அடிக்க ஆள் வைத்த மாமனார்.. பலே வேலை பார்த்த நபர்.. மருமகள் கண்ட காட்சி.!
பெயிண்ட் அடிக்க ஆள் வைத்த மாமனார்.. பலே வேலை பார்த்த நபர்.. மருமகள் கண்ட காட்சி.!
பெயிண்ட் வேலைக்கு வந்த இளைஞர்
கோவை மாவட்டத்தில் உள்ள நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் கடந்த மாதத்தில் தன்னுடைய வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க சகாயராஜ்(30) என்பவரை நியமித்துள்ளார்.
காணாமல் போன நகைகள்
அவர் வேலையை முடித்துச் சென்ற மறுநாள் செல்வராஜின் மருமகள் வீட்டிலிருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த தங்கச் செயின், கம்மல், மோதிரம் உள்ளிட்ட மூன்று சவரன் நகைகள் காணாமல் போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, அவர் தனது மாமனாரிடம் கூற போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "செல்போன் பாக்காதனு சொன்னது ஒரு குத்தமா.." இளம் பெண் எடுத்த விபரீத முடிவு.!! காவல் துறை விசாரணை.!!
திருட்டில் ஈடுபட்ட பெயிண்டர்
போலீஸிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த அவர்கள் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சகாயராஜை பிடித்து அவர்கள் விசாரித்ததில் அந்த வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தான்தான் என்பதை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.
நகைகள் பறிமுதல்
இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேலை செய்வதற்கு வாய்ப்பு கொடுத்த இடத்திலேயே தனது பலே வேலையை காட்டிய இந்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "புள்ளையும், புருசனும் வேணாம்.." ஃபேஸ்புக் லவ்வர் வேணும்.!! அடம்பிடித்த இளம்பெண்.!! அட்வைஸ் செய்த போலீஸ்.!!