வரத்து குறைவால் எகுறும் தக்காளி, பீன்ஸ், அவரையின் விலை.. இரண்டு மடங்கு காய்கறிகள் விலை உயர்வு.!
வரத்து குறைவால் எகுறும் தக்காளி, பீன்ஸ், அவரையின் விலை.. இரண்டு மடங்கு காய்கறிகள் விலை உயர்வு.!
சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில், கடந்த 2 நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.
கடந்த வாரம் வரை நாட்டு தக்காளி ரூ.25 கிலோவுக்கு என விற்பனை செய்ய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.40 முதல் ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வரத்து குறைவு காரணமாக தக்காளி மட்டுமல்லாது இஞ்சி, அவரை உட்பட பல காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளளது.
இன்றைய நிலவரப்படி இஞ்சி ரூ.200, பீன்ஸ் ரூ.80, அவரை ரூ.60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து அதிகமாக இருக்கும் பட்சத்தில், விலை குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.