ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை... கொலையாளிகளுக்கு காவல்துறை வலை வீச்சு.!
ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை... கொலையாளிகளுக்கு காவல்துறை வலை வீச்சு.!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரியல் எஸ்டேட் அதிபர் எட்டு பேர் கொண்ட கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான கேசவன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதோடு பைனான்ஸ் மற்றும் செங்கல் சூலையும் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தளி என்ற பகுதி அருகே தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் கேசவன்.
அப்போது காரிலிருந்து இறங்கிய எட்டு பேர் கொண்ட கும்பல் இவரை சரமாரியாக வெட்டி இருக்கிறது. அவர்களிடமிருந்து தப்பி ஓட முயற்சித்து இருக்கிறார் கேசவன். ஆயினும் அந்த கும்பல் விடாமல் அவரைத் துரத்திச் சென்று வெட்டி விட்டு காரில் தப்பிச் சென்றனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
காவல்துறையினர் வந்து பரிசோதித்து பார்த்தபோது சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் கேசவன். இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டியால் கொல்லப்பட்டாரா.? அல்லது முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா என தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.