புழு பிரியாணி சாப்பிடலையோ.. ஸ்டார் பிரியாணி ரெஸ்டாரண்ட்டில் சம்பவம்..!
புழு பிரியாணி சாப்பிடலையோ.. ஸ்டார் பிரியாணி ரெஸ்டாரண்ட்டில் சம்பவம்..!
உணவகத்தில் சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு, புழு பிரியாணி வழங்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், சின்னார் அருகே ஸ்டார் பிரியாணி உணவகம் அமைந்துள்ளது. அப்பகுதியில் பிரபலமான உணவகமாக, இருக்கும் ஸ்டார் பிரியாணி உணவகத்தில், நாளொன்றுக்கு 1000 பேர் வரை சாப்பிட்டு செல்வார்கள். இந்நிலையில், இந்த கடைக்கு காவேரிபட்டணம் பகுதியை சார்ந்த மூர்த்தி, அருண், இராமச்சந்திரன், அருள் உட்பட 5 பேர் வந்துள்ளனர்.
இவர்களில் 4 பேர் சிக்கன் பிரியாணியை ஆர்டர் செய்திருந்த நிலையில், சர்வர் சிக்கன் பிரியாணியை எடுத்து வந்து கொடுத்த போது, அதில் பெரிய அளவிலான புழு இருந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மூர்த்தி உணவக நிர்வாகத்திடம் கேட்டபோது, கத்திரிக்காயில் இருந்து வந்திருக்கும் என அலட்சியத்துடன் பதில் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவே, பணியில் இருந்த ஊழியர்கள் பெங்களூரில் இருக்கும் மேலாளருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். மறுமுனையில் பேசிய அந்த மேலாளரோ, இதெல்லாம் ஒரு புகாரா? சாப்பிட்டு கிளம்பு வேண்டியது தானே? என்று தெரிவித்துள்ளார்.