தந்தையும், மகனுமான சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூரம்.. கர்ப்பமானதால் மனதுடைந்த சிறுமியின் விபரீத செயல்.. கண்ணீர் சோகம்.!
தந்தையும், மகனுமான சிறுமியை மிரட்டி சீரழித்த கொடூரம்.. கர்ப்பமானதால் மனதுடைந்த சிறுமியின் விபரீத செயல்.. கண்ணீர் சோகம்.!
காம எண்ணம் கொண்ட மகனும், தந்தையும் சிறுமியை ஆசைவார்த்தை கூறி மிரட்டி சீரழித்த சோகத்தில், கர்ப்பமான சிறுமி தனது நிலையை எண்ணி மனதுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அத்திவீரம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சின்னத்தம்பி (வயது 47). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரின் 18 வயது மகள் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னீக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த 1ம் தேதி மாணவி எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார்.
அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். அப்போது, மருத்துவமனையில் சிறுமி கர்ப்பமாக இருக்கிறார் என்று தெரியவந்தது. நேற்று முன்தினம் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக மாணவியின் தந்தை சின்னத்தம்பி சாமல்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், அத்திவீரம்பட்டியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 58), அவரின் மகன் வேலு (வயது 36) ஆகியோர் மகளை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் மகள் கர்ப்பமான நிலையில், மனதுடைந்து தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில் பெரும் அதிர்ச்சி தகவல் வெளியானது. சிறுமியின் உறவினரான புஷ்பராஜ், வேலு பக்கத்து வீட்டில் வசித்து வந்துள்ளனர். உறவினரின் வீடு என்பதால் வேலுவின் வீட்டிற்கு சிறுமி அவ்வப்போது சென்று வருவது இயல்பு.
இந்த நிலையில், காம எண்ணம் கொண்ட வேலு சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனது இச்சையை தீர்த்துள்ளான். இந்த தகவலை அறிந்த புஷ்பராஜும் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். இதனால் கர்ப்பமான மாணவி மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்ய எலி பேஸ்டை சாப்பிட்டு இருக்கிறார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, தந்தை, மகனை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.