வகுப்பறையிலேயே 9 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி.. மாணவன் பகீர் சம்பவம்..!
வகுப்பறையிலேயே 9 ஆம் வகுப்பு மாணவிக்கு தாலி.. மாணவன் பகீர் சம்பவம்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, திப்பசந்திரம் கிராமத்தில் அரசு இருபாலர் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவன், தன்னுடன் பயின்று வந்த மாணவிக்கு பள்ளி வளாகத்தில் வைத்தே தாலி கட்டி இருக்கிறார்.
இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்த பிற மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த ஆசிரியர்கள் மாணவ, மாணவியின் பெற்றோருக்கு தகவலை தெரியப்படுத்தியுள்ளார். மாணவியிடம் பெற்றோர்கள் நேரில் வந்து விசாரணையும் செய்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, பெற்றோர்கள் பிள்ளைகளை எச்சரித்த நிலையில், ஆசிரியர்கள் மிகுந்த கண்டனத்துடன் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 9 ஆம் வகுப்பு தேர்வுகளும் தொடங்கவுள்ள நிலையில், மாணவர்கள் மீது எதிர்காலம் கருதி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும், தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலரும் விசாரணை நடத்தி வருகிறார். இந்த தகவலை அறிந்த மக்களும், சமூக ஆர்வலர்களும் இளம் தலைமுறையின் சீர்கேடுகளை எண்ணி வருத்தப்படுவதாக தெரிவிக்கின்றனர்.