நடிகை குஷ்புவை எரிச்சலடைய செய்த ஏர்டெல் நிறுவனம்! எப்படி பழிவாங்கியுள்ளார் பாருங்கள்
Kushboo urges to quit airtel india
தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகை குஷ்பு. இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவர் சமூகவலைதளங்களில் எந்தவித பாரபட்சமும் இன்றி ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
ஆனால் இந்த முறை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். ட்விட்டரில் இவர் பதிவிட்டுள்ள அந்தப் பதிவு மிகவும் வைரலாகி வருகிறது.
அந்த பதிவில், "ஏர்டெல் இந்தியா நிறுவனத்தின் சேவை மிகவும் வலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 வாரங்களாக எனது சர்வதேச காலர் டோனை நிறுத்த வேண்டுகோள் விடுத்தும் அவர்கள் இன்னும் நிறுத்தவில்லை. அதற்கான காரணத்தையும் யாரும் எனக்கு சொல்லவில்லை. ஏர்டெல்லை யாரும் பயன்படுத்தாதீர்கள்" என பதிவிட்டுள்ளார்.