×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பாஜக தலைவர் அண்ணாமலை ‌டுவிட்...!

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பாஜக தலைவர் அண்ணாமலை ‌டுவிட்...!

Advertisement

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது என தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

கோவையில் நீதிமன்ற வளாகத்திலும், பொதுமக்கள் முன்னிலையிலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது. துப்பாக்கிக் கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது. கோவை
கொலை நகரமாகிக் கொண்டிருக்கிறது. 

சட்டம் ஒழுங்கு, திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ளன. காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அமைச்சர்களையும் அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி, அதில் தமிழகத்தைத் தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு.

உடனடியாக, தமிழக அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #BJP President Annamalai #dmk #Law and order meeting laughs
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story