கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகர் லாரன்ஸ் புதிய திட்டம்
lawrence plans to build new 50 houses for gaja affected people
வங்க கடலில் உருவான காற்றழத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாறி நகர்ந்து வந்த நிலையில் கடந்த 15-ம் தேதி அதிவேக காற்று மற்றும் மழையுடன் கரையை கடந்தது.
இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுக்கோட்டை உட்பட பல மாவட்டங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்து பல வீடுகள் சேதமடைந்துள்ளது. செல்போன் கோபுரங்களும் சரிந்தன. ஓடு மற்றும் வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன.
இந்த புயலால் பாதிக்கப்பட்ட சிலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். வீடுகளின் மீது மரங்கள் விழுந்தும், கூரைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டும் ஏழை விவசாயிகளின் வீடுகள் நாசமாகியுள்ளன. இதனை கருத்தில் கொண்டு நடிகர் ராகவா லாரன்ஸ் புதிதாக ஒரு திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு இழந்த நமது விவசாயிகளுக்கு ஐம்பது வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு பிரபலங்கள் மக்கள் தற்போழுது சந்தித்து வரும் இன்னல்களை மட்டும் நிவாரண பொருட்கள் மூலம் தீர்த்து வரும் நிலையில், வீடுகளை இழந்த மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகுக்கும் லாரன்ஸின் திட்டத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மேலும் அவர் அந்த அறிவிப்பில், ஒரு தனியார் தொலைகாட்சியும் அவரோடு இந்த திட்டத்தில் இணைந்து செயல்படப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்தால் அவர்களுக்கு தெரிவிக்கும் படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.