சென்னையில் சிறுத்தை நடமாட்டமா.? சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியால் பரபரப்பு!
Leopard in chennai? Cctv footage
சென்னை செங்கல்பட்டு அருகே சிறுத்தை நடமாடுவதாக கண்காணிப்பு கேமராவில் வெளியான காட்சிகளால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆனால் அது சிறுத்தை அல்ல, காட்டு பூனைதான் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
சென்னை, மகேந்திரா வேர்ல்டு சிட்டி நுழைவாயில் பகுதியில், நேற்று அதிகாலை, சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக, பொதுமக்கள், தகவல் தெரிவித்தனர். ஏற்கனவே மக்கள் கொரோனா அச்சத்தில் இருக்கும் நிலையில் இந்த தகவல் மேலும் பொதுமக்களிடையே பீதியை கிளப்பியது.
இதையடுத்து அங்கு சென்ற செங்கல்பட்டு வனத்துறையினர், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் கண்காணிப்பு கேமராவில் பதிவானது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து வனத்துறை அதிகாரி கூறுகையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி காட்டு பூனை தான். யாரும் அச்சமடைய வேண்டாம். மேலும்,
இதுபோல் தேவை இல்லாமல் மக்களை பீதியடையச்செய்வோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரக அதிகாரி எச்சரிக்கை விடுத்தார்.