உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்.! திமுக வெளியிட்டுள்ள அறிவிப்பு.!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதனையடுத்து செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6, 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், திமுக சார்பில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்ப மனு அளிக்கலாம்.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினருக்கு ரூ.10 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பெண்கள் பாதித்தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். விருப்ப மனுக்களை திமுக மாவட்ட செயலாளரிடமோ அல்லது அண்ணா அறிவாலயத்திலோ ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.