தனியார் பள்ளிகளுக்கு காத்திருக்கும் ஆப்பு! பள்ளி கல்வித்துறையின் அதிரடி! பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சி!
loss to private school
இன்றைய காலத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களே தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். அதே போல் சாதாரண மக்களும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதையே பெருமளவில் விரும்புகின்றனர்.
கூலி வேலை செய்பவர்கள் கூட, தங்கள் குழந்தைகளுக்கு நல்ல படிப்பை தனியார் பள்ளியில் தான் கொடுக்கிறார்கள் என்ற மனா நிலையில் உள்ளனர். ஆனால் திறமை அதிகம் உள்ளவர்களே அரசு பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர் என்பதை அவர்கள் உணரவில்லை என்பது தான் வேடிக்கையான விஷயமாக உள்ளது.
இதன்காரணமாக தான் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மேலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தும் வருகிறது. இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை உயர்த்த பள்ளி கல்வித்துறை புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளை தொடங்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி சேர்க்கை நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்க உள்ளது.
தனியார் பள்ளிகளை போலவே அரசு பள்ளிகளிலும் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. இது பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதனால் இந்த வருடம் முதல் தனியார் பள்ளியின் மோகம் குறைந்துவிடும் என பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது.