ஓடி போகலாம் வா... வர மறுத்த கள்ளக்காதலி... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!
ஓடி போகலாம் வா... வர மறுத்த கள்ளக்காதலி... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்.!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் சண்முகம் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கேசவன் மனைவி மாரியம்மாள் என்பவருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சண்முகம், தனது கள்ளக்காதலியான மாரியம்மாளை தனியாக சென்று கோவையில் வாழலாம் என்று வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு மாரியம்மாள் சம்மதம் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சண்முகம் கடந்த 2013 ஆம் மார்ச் 15 ஆம் தேதி மாரியம்மாளை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.சுபத்ரா இன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில் சண்முகத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். பணத்தை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.