வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! 7 நாட்களுக்கு மழை!! இந்திய ஆய்வு மையம் தகவல்!!
வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி! 7 நாட்களுக்கு மழை!! இந்திய ஆய்வு மையம் தகவல்!!
சென்ற மாதம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தாலும், மறுநாள் வேலைக்கு செல்லும் போது சாலைகளில் தேங்கி கிடந்த தண்ணீர்களால் ஏற்பட்ட போக்குவரத்துக்கு நெரிசல் போன்றவற்றால் கடும் சிரமம் அடைந்தார்கள்.
பின்னர், கடந்த 2, 3 வாரங்களாகவே மழையானது குறைந்துள்ளது. அவ்வப்போது லேசான சாரல் மழை மட்டுமே எட்டி பார்த்தது. இந்த நிலையில், தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் ஏழு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்றும், இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளனர்.