பதைபதைப்பு வீடியோ: நூலிழையில்., உயிர் தப்பிய பயணி.. ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து விபரீதம்.!
பதைபதைப்பு வீடியோ: நூலிழையில்., உயிர் தப்பிய பயணி.. ஓடும் இரயிலில் ஏற முயற்சித்து விபரீதம்.!
ஓடும் இரயிலில் ஏறுவதும், இறங்குவதும் நமது உயிருக்கே பெரும் ஆபத்தாக முடிந்துவிடும். நொடிப்பொழுதில் நமது அலட்சியம் மற்றும் அனாவசிய தைரியத்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகளவு உள்ளன.
இதனைகுறைக்க பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி இருந்தாலும், இரயில் நிலையத்திற்கு நேரத்திற்கு வராமல் அல்லது இரயில் நகரும் போது ஏற முயற்சிப்பது என மக்களின் அலட்சியம் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் அவர்கள் பொதுமக்களாலும், நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளாலும் காப்பாற்றப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியர் இரயில் நிலையத்தில், பயணியொருவர் மெதுவாக நகர்ந்துகொண்டு இருக்கும் இரயிலில் ஏற முயற்சிக்கிறார். ஆனால், அவரின் துரதஷ்டவசம் படிக்கட்டு கம்பியை பிடித்தவாறு இரயில் சக்கரம் - பிளாட்பாரம் இடையே விழுந்துவிடுகிறார்.
இதனைக்கண்ட பயணி ஒருவர் மற்றும் இரயில்வே பாதுகாப்புப்படை காவல் அதிகாரி, அவரை விரைந்து செயல்பட்டு காப்பாற்றுகின்றனர். நொடியில் அவர் தவறி இரயில் சக்கரத்திற்கு இடையே விழுந்து இருந்தால், அவரின் உயிரே போயிருக்கும்.
இரயில் மெதுவாக நகர்ந்துகொண்டு இருந்ததால், இதனைகவனித்த சிக்னல் மேன் மற்றும் கார்டு, உடனடியாக தகவலை பரிமாறி இரயிலை நிறுத்தியுள்ளனர். பின்னர், அந்த நபரும் இரயிலில் ஏறி பயணித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.