தாயை கவனிக்க தவறிய மகளின் சொத்து பறிப்பு! உயர்நிதிமன்றம் அதிரடி!!
தாயை கவனிக்க தவறிய மகளின் சொத்து பறிப்பு! உயர்நிதிமன்றம் அதிரடி!!
தாயை சரியாக பார்த்துக் கொள்ளாத மகளுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட சொத்தின் பத்திரத்தை வருவாய் அலுவலர் ரத்து செய்தது குறித்த உத்தரவை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
சுகுணா என்னும் பெண் அவரது தாயின் வயதான காலத்தில் பராமரித்து பார்த்துக் கொள்வதாக கூறியதாலேயே அவருக்கு சொத்து எழுதி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சுகுணா பத்திரத்தில் இருக்கும் நிபந்தனைகளை பின்பற்ற தவறியுள்ளார். தாயை பராமரிக்காமல் நிற்கதியாக்கி உள்ளாள். இதனால் வருவாய் அலுவலர் அவருக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்துள்ளார். இதனை உயர்நீதிமன்றமும் இந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.