×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – தேனி இடையே ரயில் சேவை,.. மக்களின் நீண்ட நாள் ஏக்கம் நிறைவேறியது..!

12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – தேனி இடையே ரயில் சேவை,.. மக்களின் நீண்ட நாள் ஏக்கம் நிறைவேறியது..!

Advertisement

12 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை – தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கேரளா பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி – மதுரை இடையிலான ரயில் போக்குவரத்து கடந்த 1928-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓட தொடங்கியது. போடி, தேனி, ஆண்டிபட்டி மட்டுமின்றி மதுரை வரை வழியோர ஊர்கள், உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி பகுதி மக்கள், மாணவர்கள், அரசு, தனியார் வேலைக்கு செல்வோருக்கும் உதவிகரமாக இருந்தது.

குறைந்த கட்டணத்தில் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் இந்த ரயில் சேவை பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில், இந்தியா முழுவதும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை – போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

தண்டவாளங்களைப் பிரித்து எடுத்து, பிற ஊர்களைப் போன்று அகல ரயில் பணி முடிந்தது. மதுரை – போடிக்கு விரைவில் ரயில் ஓடும் என, தேனி மாவட்டம் மற்றும் செக்கானூரணி, உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். ஆனாலும், அது, சீக்கரமாக நடக்கவில்லை.

இந்நிலையில், சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை – போடி அகல ரயில்பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் தற்போது முடிந்துள்ளன. ஏற்கெனவே மதுரை – உசிலம்பட்டி 37 கி.மீ., துாரத்தை ஜனவரி 2020-ல் பாதுகாப்பு ஆணையர் மனோகரனும், உசிலம்பட்டி – ஆண்டிபட்டி 21 கி.மீ., பாதையை டிசம்பர் 2020-ல் அபய்குமார் ராய் என்பவரும் ஆய்வு செய்தனர்.

மதுரை – ஆண்டிபட்டி ரயில் சேவை தொடங்க இரு முறை அட்டவணை வெளியான நிலையிலும், சில நிர்வாக காரணமாக ரயில் இயக்கம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், ஆண்டிபட்டி – தேனி 17 கி.மீ., துாரத்தை மார்ச் 2022-ல் மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரயில் சேவை தொடங்கலாம் என அனுமதி அளித்தார். இதன்படி, ரயில் இயக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இதற்கிடையில், மதுரை – தேனிக்கு முதல் கட்டமாக ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு வரும் பிரதமர் மோடி மே 26-ல் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் வைத்து மதுரை- தேனி ரயில் சேவை தொடங்கி வைக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகமும் மேற்கொண்டுள்ளது.

சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை – தேனி இடையே மே 26 முதல் ரயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட மக்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறும் போது, ”மதுரை- தேனி இடையே அனைத்துப் பணிகளும் முடிந்து, ரயில் ஓட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தோம். பிரதமர் சென்னையில் வைத்து ரயில் சேவையை 26-ம் தேதி தொடங்கி வைக்கிறார். தேனி – போடி இடையே 15 கிலோ மீட்டருக்கு பணி நடக்கிறது. விரைவில் அதுவும் முடிந்துவிடும். மேலும், மதுரை – போடிக்கு மின்சார ரயில் இயக்க அனுமதியும் கிடைத்துள்ளது. மின்மயமாக்கல் பணி விரைவில் தொடங்க இருக்கிறது” என்று கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Theni #Train service #Broad Gauge #electric train
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story