இனி லஞ்சம் குறித்து பயப்பட தேவையில்லை! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி
madurai high court about bribe by police
நாட்டில் எல்லா துறைகளிலும் நல்லவர்களும் உண்டு கெட்டவர்களும் உண்டு சில நேரங்களில் சில நல்லவர்களை மக்கள் தங்கள் ஆதாயத்திற்காக தீயவர்களாக மாற்றிவிடுகின்றனர் குறிப்பாக லஞ்சம் கொடுப்பது மூலம் நேர்மையான பல அதிகாரிகள் தீயவர்களாக மாற நேரிடுகிறது.
அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் மக்கள் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நேர்மையாக நடக்க வேண்டிய ஒரு சில காரியங்களை குறுக்கு வழியில் விரைவில் முடிந்து தருவதற்காக மக்களே லஞ்சம் கொடுத்து அதிகாரிகளை லஞ்சம் வாங்க வைக்கின்றனர். அதுவே அவர்களுக்கு தூண்டுதலாகவும் அமைந்துவிடுகிறது.
இந்த லஞ்ச விவகாரம் அதிகமாக நடைபெறும் துறையில் முக்கியமானது காவல்துறையும். காவல்துறையினர் லஞ்சம் பெறுகிறார்கள் என்றால் அது அவர்களது தவறு மட்டுமல்ல மக்களும்தான். அதிலும் பல நல்ல காவல்துறையினர் இன்னும் லஞ்சம் வாங்காமல் பணியாற்றி வருகின்றனர். அவர்களையும் நாம் பாராட்டியே தீரவேண்டும்.
இந்நிலையில் லஞ்சம் வாங்குவோர் மீது லஞ்சஒழிப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணை பிறப்பித்துள்ளது. மாமூல் வசூல், லஞ்சம் வாங்கும் போலீசார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உள்துறை செயலர், டிஜிபி 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.