முகக்கவசம் புரோட்டா! கொரோனா விழிப்புணர்வில் புதிய யுக்தி! மாஸ் காட்டும் மதுரை உணவகம்!
Madurai hotel prepared mask parotta

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் கொரோனா பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொது முடக்கங்கள் செய்யப்பட்டது ஆனாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தபாடில்லை.
தமிழகத்தில் சென்னையிலேயே கொரோனா பெருமளவில் பரவி வந்தது. பின்னர் தற்போது சென்னைக்கு பிறகு மதுரையில் மின்னல்வேகத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த பல தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தொடர்ந்து வித்தியாசமான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரேயுள்ள பிரபல உணவகத்தில், கொரோனோ பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அவசியம் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், முககவசம் வடிவில் புரோட்டாவை தயார் செய்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து அந்த உணவகம் கூறுகையில், கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த புரோட்டா முகக்கவசங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என கூறியுள்ளனர்.