மதுரை தியாகராஜா பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு ராயல் சல்யூட்... பாராட்டுகளை குவித்து தள்ளும் நெட்டிசன்கள்.!
மதுரை தியாகராஜா பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு ராயல் சல்யூட்... பாராட்டுகளை குவித்து தள்ளும் நெட்டிசன்கள்.!
நமது வாகனங்களுக்கு நாம் தினமும் கட்டாயம் எரிபொருளை நிரப்ப எரிபொருள் நிலையத்திற்கு செல்வோம். அப்போது, வாகனத்தின் சக்கரத்தில் காற்று குறைவாக இருந்தால், அதனை நிரப்ப அங்கு நியமனம் செய்யப்பட்ட ஊழியரிடம் கோரிக்கை வைப்போம்.
பரபரப்பான அலுவலக நேரங்களில் அவ்வூழியர்கள் வரிசைகட்டி நிற்கும் அனைத்து வாகனத்திற்கு காற்றை நிரப்புவார்கள். இவ்வாறாக ஒவ்வொரு வாகனத்திற்கு இரண்டு சக்கரம், இரண்டு முறை வாகனத்திற்கு குனிந்து நிமிர்ந்து என அவர்கள் படும் இன்னல்கள் சொல்லியுமாளாது.
இந்த நிலையில், மதுரையில் உள்ள எக்கோ பார்க் தியாகராஜா பெட்ரோல் பங்க் உரிமையாளர் தனது பெட்ரோல் நிலையத்தில் காற்று நிரப்பும் இடத்தில் ஊழியர் எதுவாக நின்றவாறு வாகனங்களுக்கு காற்றை நிரப்ப ஏற்பாடுகள் செய்துள்ளார். இதனைப்போன்றதொரு வசதியை அனைத்து பெட்ரோல் பங்கிலும் அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.