மக்களே இதை நம்பாதீங்க... மகளிர் உரிமை தொகை குறைத்து பரவும் தவறான தகவல்... காவல்துறை எச்சரிக்கை!!
மக்களே இதை நம்பாதீங்க... மகளிர் உரிமை தொகை குறைத்து பரவும் தவறான தகவல்... காவல்துறை எச்சரிக்கை!!
தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பம் கடந்த வாரம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில் தகுதியான பயனாளிகள் மட்டும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்த அந்த பஞ்சாயத்தில் வழங்கி வருகின்றனர். மேலும் வருகின்ற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி அதாவது பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைப்பதாக தெரிவித்திருந்தார்.
அதற்கான பணிகள் அதிதீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் மகளிர் உரிமைத் தொகைக்கு நிதி திரட்டுவதற்காக, தமிழ்நாடு காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்க டார்கெட் நிர்ணயித்துள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் ஒரு பொய்யான தகவல் எனவும் அரசு காவல் துறைக்கு எந்தவித ராக்கெட்டும் கொடுக்கவில்லை. இது போன்ற தவறான தகவலை பரப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் மாஸ்டர் பிளான் என்ற தலைப்பில் வெளிவந்த தகவல் ஒரு தவறான தகவல் எனவும் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை வழங்குவதற்கு போதுமான நிதி திரட்ட பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும் அந்த வகையில் ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு அரசோ, தமிழ்நாடு காவல்துறையோ இது போன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பிறப்பிக்கவில்லை. வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எவ்வித அபராதமும் தமிழக காவல்துறை வசூல் செய்வது இல்லை. இதுபோல், பொய்யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக காவல் துறை சார்பாக தெரிவித்து கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.