வேலைக்கு வர மறுத்த பெண்.! அப்பெண்ணை வரவழைக்க போலி திருமணப் பத்திரிக்கை அடித்த நபர்.! அதிர்ச்சி சம்பவம்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்த
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நம்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் வீட்டில் ஆறு மாதத்திற்கு முன்புவரை முத்துமணி என்ற பெண் கூலி வேலை செய்து வந்துள்ளார். கணவனை இழந்த முத்துமணிக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார்.
இந்நிலையில் சுந்தரமூர்த்தியின் நடத்தை சரியில்லாததால் அங்கு வேலைக்கு செல்வதை முத்துமணி நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுந்தரமூர்த்தி அவரை பலமுறை தொடர்பு கொண்டு தனது வீட்டுக்கு வேலைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் முத்துமணி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரமூர்த்தி முத்துமணியின் 17 வயது மகளுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக போலியாக திருமண பத்திரிகை அச்சடித்து பல்வேறு பகுதிகளில் கொடுத்துள்ளார்.
அந்த பத்திரிகையை முத்துமணி வீட்டிலும் வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துமணி சுந்தரமூர்த்தியிடம் கேட்டதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முத்துமணி, ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து ஆலங்குடி போலீசார் சுந்தரமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.