காதலிக்கு தெரியாமல் ரகசிய கேமிரா வைத்த காதலன்! உண்மை தெரிந்து காதலி எடுத்த முடிவு!
Man attached hidden camera in lover house
காதலி தங்கியிருந்த வீட்டில் காதலனே ரகசிய கேமிரா வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான ரோஸி என்பவர் திருச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள மனுவில், நான் திருச்சி மலைக்கோட்டை அருகே தங்கிருந்தபோது அதேபகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை அடுத்து நான் இருந்த வீட்டை காலி செய்துவிட்டு எனது காதலர் கூறிய வீட்டில் வாடைக்கு சென்றேன்.
சில நாட்கள் கழித்து அந்த வீட்டில் ரகசிய கேமிரா இருப்பதை கண்டுபிடித்தேன். இதுகுறித்து எனது காதலரிடம் கேட்டபோது, நான் உன்னை திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்றால் நீ என்னை கெஞ்ச வேண்டும். இல்லையெனில் வீடியோவில் பதிவான காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிவிடுவதாக மிரட்டுகிறார் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இதுகுறித்து நான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை விசாரணை நடைபெறவில்லை எனவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.