கொரோனோவால் பாதிக்கப்பட்டவர் என பரவிய வதந்தி! மன உளைச்சலில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு!
Man commit suicide for rumour about corono
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் முஸ்தபா. இவர் கேரளாவில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி இருகுழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கொரோனோவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்திய நிலையில்,முஸ்தபா தமிழகம் திரும்பி மதுரையிலுள்ள தனது அம்மாவீட்டில் தங்கிஇருந்துள்ளார்.இந்நிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல், காய்ச்சலாக இருந்துள்ளது. சோர்வாக இருந்துள்ளது. இந்நிலையில் அக்கம்பக்கத்தினர் அவருக்கு கொரோனா இருக்கலாம் என சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறையினர் முஸ்தபாவையும் அவரது தாயாரையும் 108 மூலமாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், வெகு நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் அப்பகுதிமக்கள் சரக்குவாகனம் ஒன்றை தயார் செய்து, அதில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த முஸ்தபா சென்னையிலிருந்து திருநெல்வேலிக்குசென்ற சரக்குரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் ரயில்வே காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.