அரசு பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், ஐ.டி ஊழியர் துடிதுடிக்க பரிதாப மரணம்.. நெஞ்சை உலுக்கும் உயிரிழப்பு.!
அரசு பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில், ஐ.டி ஊழியர் துடிதுடிக்க பரிதாப மரணம்.. நெஞ்சை உலுக்கும் உயிரிழப்பு.!
இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த ஒருவரின் மீது அரசு பேருந்தின் பின்சக்கரம் ஏறியதால், அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூர் பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார். இவருடைய மகன் தர்மராஜ் (வயது 21). இவர் கோயம்புத்தூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் தர்மராஜ் தனது சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் ஆர்.ஜி.புதூர் அருகாமையில் சென்ற நிலையில், தர்மராஜின் வாகனத்தின் மீது அரசு பேருந்து பின்னாலிருந்து மோதியுள்ளது. இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து, பேருந்தின் பின் சக்கரம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த கோயம்புத்தூர் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தர்மராஜின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அரசு பேருந்து ஓட்டுநர் திருச்செங்கோடு பகுதியில் வசித்து வந்த சரவணன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து ஐடி நிறுவன ஊழியரை அரசுப் பேருந்து மோதியதில் அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.