காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கொரோனா பயத்தால் மாரடைப்பில் மரணம்.! அதிர்ச்சி சம்பவம்.
Man died in heart attack due to corono fear near virudunagar
தனக்கு கொரோனா இருக்குமோ என்ற பயத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த 30 வயது இளைஞர் மாரடைப்பால் உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி அதிக உயிர் இழப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பணணை கிராமத்தைச் சேர்ந்த முத்துராம் என்ற 30 வயது இளைஞர் ஒருவர், கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சிகிச்சை சமயத்தில் தனக்கு கொரோனா இருக்குமோ என முத்துராம் அஞ்சியுள்ளார்.
பதற்றம் அதிகமாகி ஒருகட்டத்தில் முத்துராமுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா இருக்குமோ என்ற பயத்திலையே இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.