ஜெர்மனியில் பொறியியல் படிப்பு! பெண்களை வீழ்த்தி வாலிபர் செய்த கொடூரகாரியம்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
Man girl abuse and cheated money in ramanathapuram
ராமநாதபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரின் பிரத்யேக எண்ணிற்கு திருமணமான இளம்பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் மோசடி கும்பல் ஒன்று, பெண்களை நண்பர்களாக்கி, அவர்களது புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டல் விடுப்பதாக குறுந்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
மேலும் அதில் அவர்கள் பெண்களைக் கட்டாயப்படுத்தி, வீடியோ காலில் நிர்வாணமாக பேசக்கூறி அதனை பதிவுசெய்து இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் தன்னை மிரட்டி 7.50 லட்ச ரூபாயை பறித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமாரின் அறிவுறுத்தல்படி, தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளின் சமூக வலைத்தளங்கள், வங்கிக் கணக்குகள், இணையதள வங்கி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை தீவிரமாகக் கண்காணித்துள்ளனர். அதனை தொடர்ந்து கீழக்கரையை சேர்ந்த முகமது முகைதீன் தலைமையில் மோசடி கும்பல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு பயின்று வருகிறார். மேலும் பெண்களை மிரட்டிப் பறிக்கும் பணத்தில் தமிழகத்திலுள்ள நண்பர்களுக்குச் சிறிது கமிஷனை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிகொண்டுள்ளார்.
இது தொடர்பாக முகமது முகைதீன், புதுச்சேரி முகமது இப்ராஹிம் நூர், சென்னை பாசித் அலி, திருநெல்வேலி ஜாசம் கனி, கீழக்கரை பார்டு பைசுல், நாகப்பட்டினம் முகமது ஜாசிம் உள்ளிட்ட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.