ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தியதால் பயங்கரம்; கத்தியால் குத்தி கொடூர கொலை.!
ஓரினசேர்க்கைக்கு வற்புறுத்தியதால் பயங்கரம்; கத்தியால் குத்தி கொடூர கொலை.!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 45). இவர் சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் கீழே தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி அவினாஷ் (வயது 22).
இவரும் அங்கு கடந்த ஒரு வாரமாக தங்கி இருந்துள்ளார். இந்த நிலையில் அவினாஷ் கடந்த 26-ஆம் தேதி வேளச்சேரி-தரமணி சாலையில் கத்தியுடன் நின்ற கொண்டு தான் கொலை செய்துவிட்டதாக கூச்சலிட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தன்னுடன் தங்கிய கொளஞ்சியை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். இதன்பின் மேம்பாலத்தின் கீழ் இருந்த உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், மேற்படி விசாரித்துள்ளனர்.
அதில், மதுபோதையில் இருந்த கொளஞ்சி தன்னிடம் வந்து ஓரினசேர்க்கைக்கு அழைத்ததாகவும், இதற்கு மதிப்பு தெரிவித்த நிலையில் கட்டாயப்படுத்தியதால் ஆத்திரத்தில் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.