இளம்பெண்ணை கொன்று உடலை துண்டாக்கி கூறு போட்ட இறைச்சிக்கடைக்காரர்.! அதிர்ச்சி சம்பவம்.!
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் கலைச்செல்விக்கும் மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த காசிராஜன் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கரண் சர்மா என்ற ஒன்றரை வயதுள்ள ஆண் குழந்தை உள்ளது.
கலைச்செல்வி கல்லுாரியில் படித்தபோது, சின்னமனுாரைச் சேர்ந்த, இறைச்சிக் கடை உரிமையாளர் சிலம்பரசன் என்பவரை காதலித்துள்ளார். இந்தநிலையில் திருமணமாகி குழந்தை பிறந்த பின்னரும் சிலம்பரசனுடன், கலைச்செல்வி தொடர்பில் இருந்து உள்ளார். அவருக்கு, நகை, பணம் கொடுத்து உதவி செய்தும் வந்துள்ளார்.
இந்தநிலையில் கணவருடன் தகராறு செய்து கோபித்துக்கொண்டு தந்தை வீட்டில் தங்கினார் கலைச்செல்வி. அங்கு, சிலம்பரசனை அடிக்கடி சந்தித்தார். ஆனால் சிலம்பரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி, மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில் சிலம்பரசனின் மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று, தன்னை இரண்டாவது திருமணம் செய்து குடும்பம் நடத்துமாறும், அல்லது பணம், நகைகளை திருப்பி தருமாறும் கலைச்செல்வி கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் கலைச்செல்வி மற்றும் அவரின் ஒன்றரை வயது மகன் இருவரையும் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், தன் இறைச்சிக்கடையில் வேலை பார்க்கும் சிறுவனை கத்தியை கொண்டு வரச்சொல்லி இருவரின் உடல்களையும் துண்டு துண்டாக வெட்டி, சாக்கு மூட்டைகளில் கட்டி குளத்தில் வீசியுள்ளனர். இந்தநிலையில், கலைச்செல்வியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிக்கிய சிலம்பரசன் மற்றும் உடந்தையாக இருந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.