சூப்பர் ஐயா!! 2 கால்களை இழந்த மனைவி!! தள்ளாடும் வயதில் முதுகில் சுமந்து சென்று வாக்களிக்க வைத்த கணவர்!!
இரண்டு கால்களை இழந்த தனது மனைவியை கணவர் முதுகில் தூக்கிச்சென்று வாக்களிக்கவைத்த சம்பவம் செ
இரண்டு கால்களை இழந்த தனது மனைவியை கணவர் முதுகில் தூக்கிச்சென்று வாக்களிக்கவைத்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்து, தேர்தல் முடிவுகள் வரும் மே 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை செய்வதற்காக நேற்று காலை 7 மணி முதலே வரிசையில் நின்று வாக்களித்தனர்.
அதேபோல் வயதானவர்கள், உடல் ஊனமுற்றோரும் வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி கல்யாணபுரம் சென்னை நடுநிலைப்பள்ளி உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு தனது ஊனமுற்ற மனைவியுடன் வந்த வாக்காளர் ஒருவர், வாக்கு பதிவு மையத்தில் வீல் சேர் இல்லை என்பதால் தனது மனைவியை தனது முதுகில் சுமந்து சென்று வாக்களிக்க செய்தார்.
ராமசாமி என்ற அந்த நபர் இரண்டு கால்களையும் இழந்த தனது மனைவி சுமதியை மீன்பாடி வண்டியில் வைத்து வாக்குச்சாவடி மையத்திற்கு அழைத்துவந்துள்ளார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் சுமதியை அழைத்துச்செல்ல வீல் சேர் கேட்டபோது, அங்கு வீல் சேர் இல்லை என தெரிய வந்தது.
தனது முதுமையான வயதிலும் சற்றும் யோசிக்காமல் தனது மனைவியை முதுகில் தூக்கிவைத்து ராமசாமி வாக்குசாவடிக்குள் சென்றார். இந்த காட்சி அங்கிருந்தவர்களை கவலைக்கொள்ள செய்தது.
உடலில் எந்த குறையும் இல்லாமல், பல்வேறு வசதிகள் இருக்கும்கூட வாக்கு பதிவு மையத்திற்கு செல்ல சோம்பேறிப்பட்டு ஓட்டு செலுத்த செல்லாமல் இருக்கும் நம்மில் பலருக்கு மத்தியில், மனைவியை முதுகில் சுமந்து சென்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றிய ராமசாமி அவரது மனைவி சுமதி இருவரும் நமக்கெல்லாம் ஒரு உதாரணம்.