உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி! இறுதியில் காதலனால் காதலிக்கு நேர்ந்த கொடூரம்!
Man murdered a girl in salem for illegal relationship
கள்ளகாதலியுடன் ஏற்பட்ட தகராறில் காதலன் காதலியை கொலைசெய்து தண்டவாளத்தில் வீசிச்சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே அமைந்துள்ளது புத்தூர். இங்கு வசித்துவருபவர் முனியம்மாள். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவர் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து வாழந்து வந்துள்ளார்.
இந்நிலையில் முனியம்மாளுக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில் குமார் என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதும், உறவில் ஈடுபடுவது என ஜாலியாக இருந்துள்ளனனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று செந்தில்குமார் முனியம்மாளை சந்திக்க அவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் முனியம்மாளை கொலை செய்து அவரது உடலை சாக்கு பையில் கட்டி புதூர் ரயில் தண்டவாளத்தில் வீசியுள்ளார்.
தண்டவாளத்தில் இருந்த முனியம்மாளின் உடலை பார்த்த பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைதன்னர். மேலும், தலைமறைவாக உள்ள கள்ளக்காதலன் செந்தில் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.