10 ஆம் வகுப்பு படிக்கும் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவன்! வசமாக சிக்கியது எப்படி?
man raped wife's sister
கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யப்பன் என்பவர் கட்டிட காண்ட்ராக்டர் வேலை செய்துவந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த சரண்யா எனும் பெண்ணை ஐந்து வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் அய்யப்பனுக்கு வருமானம் அதிகமாக வந்த நிலையில், தனது குடும்பத்தை விட தனது மனைவியின் குடும்பத்தை நன்கு கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 10 ஆம் வகுப்பு படுக்கும் மனைவியின் தங்கையை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவமனையில் காதலனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து விட்டதாகக் கூறி கருக்கலைப்பு செய்யக் கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் அங்கு வருவதை தெரிந்துகொண்ட அய்யப்பன், அந்த சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றார். அந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவரது அக்காவின் அய்யப்பன் 6 மாதங்களாக அவரை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதனால் சிறுமி தான் கர்ப்பமானதாக கூறியதால் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அய்யப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர்.