மதுகிடைக்காத விரக்தியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட புதுக்கோட்டை குடிமகன்!
man suicide for drink
கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் அதிகரித்ததால் அத்தியாவசிய தேவைகளான மளிகை மற்றும் காய்கறி கடைகள், குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இயங்குகின்றன.
சமூக விலகலுக்காக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன இதனால் மது அருந்தும் பலர் மதுக்கடை எப்போது திறக்கப்படும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டையில் மது கிடைக்காத விரக்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் லாரி ஓட்டுநர் கருப்பையா என்பவர் ஊரடங்கால் மது கிடைக்கததால் சாலையோர மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. குடும்கத்தை பிரிந்து 10 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்த ஓட்டுநர் கருப்பையா மதுவுக்கு அடிமையானவர் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.