மனித உரிமைகள் கழக பொதுச்செயலாளர் மனிதாபிமானமற்ற செயல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்.!
மனித உரிமைகள் கழக பொதுச்செயலாளர் மனிதாபிமானமற்ற செயல்.. சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்.!
கோவையில் இருந்து ஈரோடு சென்ற மனித உரிமைகள் கழகம் என்றதொரு கட்சியின் பொதுச்செயலாளர், சுங்கச்சாவடிக்கு பணம் செலுத்த மறுத்து அடாவடி செய்து தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனித உரிமைகள் கழகம் அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன். இவர் தனது காரில் கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தார். அப்போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி வந்துள்ளது.
சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த மறுப்பு தெரிவித்த சுரேஷ் கண்ணன், நான் அரசியல் கட்சியின் பொதுச்செயலாளர் என வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் - சுரேஷ் கண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற மனித உரிமைகள் கழகத்தின் பொதுச்செயலாளர், மனித உரிமை மற்றும் மனிதாபிமானத்தை மீறி சுங்கச்சாவடி ஊழியரை தாக்கியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சுங்கச்சாவடி மேலாளர் கணேசன் பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர் மனித உரிமைகள் கழக பொதுச்செயலாளர் சுரேஷ் கண்ணன், கார் ஓட்டுநர் சுடலை முத்து உட்பட 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.