கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய கட்-அவுட்.! அப்படி அதுல என்னதான் இருந்துச்சு தெரியுமா?
marriage cancelled by paner
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள தெள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால்.இவர் திமுகவைச் சேர்ந்தவர். இவரது மகள் சந்தியாவுக்கும், அரயாளத்தை சேர்ந்த, சண்முகம் என்பவருக்கும், திருமணம் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது.
மேலும் மணமகன் சண்முகம் அதிமுகவைச் சேர்ந்தவர். இந்நிலையில் திருமணத்தன்று மணமக்களை வாழ்த்தி மண்டபத்திற்கு முன், ராஜகோபால் தரப்பினர், தி.மு.க. கொடி கட்டி, பேனர் வைத்திருந்தனர்.
மேலும் முன் தினம் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் கலந்து கொண்டார்.அப்பொழுது சிவானந்தத்துடன் போட்டோவில் நிற்க, மணமகன் மறுத்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து வார்த்தையால் ஆரம்பித்த சண்டை கடைசியில் கைகலப்பாக மாறியுள்ளது.இந்நிலையில் மணப்பெண், திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை இவ்வளவு பிரச்சினை செய்கிறார், இவரை திருமணம் செய்தால் , என் வாழ்க்கை நரகமாகிவிடும் அதனால் எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
பின்னர் மணமகளின் தந்தை திருமணத்திற்கு வந்திருந்த தனது தங்கை மகனை சந்தியாவை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.