காதலர் தினத்தன்று நடக்க இருந்த திருமணம்..! மாப்பிளைக்கு வந்த ஒரே ஒரு வாட்சப் மெசேஜால் முடிவுக்கு வந்த 10 வருட காதல்.!
Marriage stopped due to whats app message
காதலர் தினத்தன்று காதல் ஜோடி ஒன்றுக்கு நடக்க இருந்த திருமணம் ஒரு வாட்சப் மெசேஜால் நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த நரேந்திரன் என்பவரும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கல்லூரி காலத்திலிருந்து சுமார் 10 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தினத்தன்று இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் திருமணம் நடக்க இருந்த சில நாட்களுக்கு முன்னர் மாப்பிள்ளையின் வாட்சப் எண்ணிற்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது.
அந்த வாட்சப் தகவலில், நரேந்திரனின் காதலியும் அவரது அலுவலத்தில் வேலை செய்யும் ஒருவரும் நெருங்கி பழகுவதாகவும், அவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் சாட்டிங் செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நரேந்திரன் தன் காதலியிடம் இதுபற்றி கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் திருமணத்தை நிறுத்திவிட்டு மாப்பிளை வீட்டார் திருவொற்றியூர் போலீசாரிடமும் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரித்துவந்த நிலையில், பெண் வீட்டாரும் திருமணத்தை நிறுத்திய நரேந்திரன் மீது தண்டையார்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இருவரின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.