பத்தரிக்கையாளரையும் விட்டுவைக்காத கொரோனா! வெளியான அதிர்ச்சி தகவல்!
Media people affected by corona
சீனாவில் ஆரம்பித்த கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் பெரும் அச்சத்தில் உள்ளது. கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவை தடுக்க நாடுமுழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்றுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 1,477ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 105 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் தனியார் ஊடகம் ஒன்றின் மருத்துவப் பிரிவு செய்தியாளராகப் பணியாற்றிய செய்தியாளர் ஒருவருக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் தங்கியிருந்த திருவல்லிக்கேணி மேன்ஷன் சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு செய்தி நிறுவனத்தின் ஊழியருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தியானது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.