உதவி செய்வதாக நடித்து பணம் அபேஸ்.. ஏ.டி.எம் மையத்தில் சம்பவம்.. மக்களே கவனம்.!
உதவி செய்வதாக நடித்து பணம் அபேஸ்.. ஏ.டி.எம் மையத்தில் சம்பவம்.. மக்களே கவனம்.!
ஏடிஎம் மையத்தில் பணம் செலுத்த வந்தவருக்கு உதவி செய்வது போல நாடகமாடி, அவரது பணத்தை தனது வங்கி கணக்கில் செலுத்தி ஏமாற்றிச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சீரியம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவர் ஒரு விவசாயி. இந்த நிலையில், கடந்த மாதம் 7ஆம் தேதி தனது வங்கி கணக்கில் ரூ.14,500 பணம் செலுத்துவதற்காக பாலக்கோடு பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, இவருக்கு பணம் செலுத்தும் இயந்திரத்தை இயக்க தெரியாததால், அருகிலிருந்த ஒரு நபரிடம் உதவி கேட்டுள்ளார். அத்துடன் தனது ஏடிஎம் அட்டையை கொடுத்து இதில் பணத்தை செலுத்துமாறு கூறிய நிலையில், அந்த நபர் கோவிந்தராஜின் கவனத்தை திசைதிருப்பி, அவரது ஏடிஎம் அட்டைக்கு பதிலாக தனது ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி, தனது வங்கி கணக்கிற்கு பணத்தை செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து பல மணிநேரம் ஆகிய நிலையிலும், பணம் செலுத்திய மெசேஜ் வராததால், சந்தேகமடைந்த கோவிந்தராஜ் வங்கிக்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது உங்கள் கணக்கில் எவ்வித பணமும் இல்லை என்று அவர்கள் கூறிய நிலையில், தான் ஏமாற்றப்பதையுணர்ந்த கோவிந்தராஜ், இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஏமாற்றிய நபரை தேடி வருகின்றனர்.