சரக்கடிப்பதை கண்டித்த மனைவி.. விஷம் குடித்து கணவன் தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
சரக்கடிப்பதை கண்டித்த மனைவி.. விஷம் குடித்து கணவன் தற்கொலை.. கண்ணீர் சோகம்.!
மது குடித்ததற்காக மனைவி கண்டித்ததால், மனமுடைந்த கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் அருகாமையில் வழுக்கம்பாறை பகுதியில் வசித்து வருபவர் நீலேஷ்வரன் (வயது 33). இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், தினமும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கோபமுற்ற அவருடைய மனைவி பிரியங்கா, அவரை பயங்கரமாக கண்டித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, 'இனி நீ மது குடித்தால், வீட்டிற்கு வரக் கூடாது எனவும், வேறு எங்கேயாவது செல்' என்றும் கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த நீலேஷ்வரன் விஷம் குடித்த நிலையில், உயிருக்கு போராடியுள்ளார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அவரை உடனடியாக மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
பின் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததும், அவர்கள் விசாரித்த நிலையில், நீலேஷ்வரன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால், மனைவி கண்டித்த நிலையில், விஷம் அருந்தியுள்ளார் என தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.