மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்.. திருமணமான நபர் கைது.!
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்.. திருமணமான நபர் கைது.!
கோயம்புத்தூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த திருமணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 28 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை அவரது தந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இளம்பெண்ணை பரிசோதனை செய்ததில் யாரோ பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக அந்தப் பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.அந்த புகாரி அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை செய்ததில், ஆனந்த் குமார் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளை இரவில் தூங்க வைத்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்த் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.