தாயை கொடூரமாக கொன்று விட்டு, விடிய விடிய அருகிலேயே உட்கார்ந்திருந்த மகன்! ஏன்? என்ன நடந்தது? அதிர்ச்சி சம்பவம்!!
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாத்திக்கேட்டை பகுதியை சேர்ந்தவர் 70 வயது நிறைந்த சரஸ
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மாத்திக்கேட்டை பகுதியை சேர்ந்தவர் 70 வயது நிறைந்த சரஸ்வதி, இவரது கணவர் சந்திரசேகரன். இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேருக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதியின் கணவர் உயிரிழந்த நிலையில் அவர் தனது கடைசி மகன் பழனியுடன் வசித்து வந்துள்ளார்.
திருமணமாகாத பழனி, மருந்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் அவருக்கு தலையில் அடிபட்ட நிலையில் பழனி மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்ல முயற்சி செய்யும் பழனியை அவரது தாயார் தடுத்து நிறுத்துவார்.
இவ்வாறு அண்மையில் வெளியே செல்ல முற்பட்ட பழனியை சரஸ்வதி தடுத்து நிறுத்தியபோது ஆத்திரமடைந்த பழனி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தனது அம்மாவின் கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் தாய் இறந்தது தெரியாமல் அவரது அருகிலேயே பழனி படுத்து தூங்கியுள்ளார்.