இன்று முதல் 3 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
இன்று முதல் 3 நாட்களுக்கு 11 மாவட்டங்களில் மழை..!! வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 6 ஆம் தேதி உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, படிப்படியாக வலுவடைந்து நேற்று காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறியது. இது இன்று மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் மே 13 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருநெல்வேலி, மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.