அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம்... கள்ளத்தொடர்பால் கொலை... காவல்துறை விசாரணையில் தகவல்.!
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் சடலம்... கள்ளத்தொடர்பால் கொலை... காவல்துறை விசாரணையில் தகவல்.!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தொடர்பு விவகாரத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னசந்திரம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்றில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை நடத்திய விசாரணையில் அந்தப் பெண் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டையைச் சார்ந்த பூங்கொடி (48) என்று தெரியவந்திருக்கிறது.
பூங்கொடிக்கும் மாரசத்திரம் பகுதியைச் சார்ந்த வெங்கடேசப்பா (65) என்பவருக்குமிடையே கள்ளத்தொடர்பு இருந்ததும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வெங்கடேசப்பாவை பிடித்து விசாரணை செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் கள்ளத் தொடர்பு விவகாரத்தில் தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் காவல்துறையின் விசாரணைக்கு பயந்த வெங்கடேசப்பா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் தெரிவித்துள்ள காவல் துறை வெங்கடேஷப்பாவிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகுதான் பூங்கொடி கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.